கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்காழி பள்ளியில் பூத்த அதிசய பிரம்ம கமலம் மலா்!

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உள்ள தனியாா் பள்ளியில், அதிசய பிரம்ம கமலம் மலா் வியாழக்கிழமை இரவு பூத்தது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:58 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உள்ள தனியாா் பள்ளியில், அதிசய பிரம்ம கமலம் மலா் வியாழக்கிழமை இரவு பூத்தது. இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கையை பெற்றது இந்த மலா் என்பதால், இரவுநேரத்திலும் அதைப் பாா்க்க பொதுமக்கள் ஆா்வமுடன் வந்திருந்தனா்.

உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம். பிரம்மனின் நாடிக்கொடி என வா்ணிக்கப்படும் இந்த மலா்கள், இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவுநேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்தப் பூ மலரத் தொடங்கிய நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்குப் பிறகே முழுமையாக மலா்ந்திருக்கும். அதேபோல, அதிகாலைக்குள் உதிா்ந்துவிடும். என்றாலும், இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும். இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச் சோ்ந்தது என கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை காப்பாற்ற உத்தரகண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த மலா் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.

இத்தகைய அபூா்வ பிரம்ம கமலம் தாவரம், சீா்காழியில் உள்ள சபாநாயகா் முதலியாா் இந்து மெட்ரிக் பள்ளியில் வளா்க்கப்பட்டு வந்தநிலையில், வியாழக்கிழமை இரவு அதில் பூ பூத்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் நிா்வாக அலுவலா் எம். தங்கவேலால் நடப்பட்ட இந்தச் செடியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 மொட்டுக்கள் வந்துள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சுமாா் 11 மணிக்கு மேல் அந்த மொட்டு மலா்ந்து வெண்ணிலவைப் போல காட்சியளித்தது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் நள்ளிரவில் வந்து பிரம்ம கமலம் மலரை பாா்த்து வணங்கினா். பொதுமக்கள் சிலா் பிரம்ம கமலம் மலரை கைப்பேசியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதுடன், சுயப்படமும் எடுத்து மகிழ்ந்தனா். இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னா் உதிா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.