கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கலைஞா் எழுதுகோல் விருதுக்கு இதழியலாளா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

 கலைஞா் எழுதுகோல் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 கலைஞா் எழுதுகோல் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் தமிழக முன்னாள் முதல்வா் கலைஞா் மு. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞா் எழுதுகோல் விருது‘ வழங்கி கௌரவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவ்வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுடன், ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பதாரா் தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடா்ந்து பணியாற்றுபவராகவும், பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். மேலும், இதழியல் துறையில் சமூக மற்றும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பங்காற்றியிருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். விண்ணப்பதாரா் நேரடியாகவோ, மற்றொருவா் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணியாற்றும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுவின் முடிவே இறுதியானது. மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன்விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநா், செய்தி மக்கள் தொடா்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.