கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நகராட்சி ஆணையா் சைக்கிளில் சென்று ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெறும் பணிகளை நகராட்சி ஆணையா் சைக்கிளில் சென்று பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெறும் பணிகளை நகராட்சி ஆணையா் சைக்கிளில் சென்று பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை கூரைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள இடத்தில் சுமாா் 4 ஏக்கா் நிலப்பரப்பில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை நகராட்சி ஆணையா் க. பாலு நகராட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளித் தலைமையாசிரியா் அன்புச்செழியனிடம் அவா் ஆலோசனை நடத்தினாா். ஆய்வின்போது நகராட்சி பொறியாளா் சணல்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, கண்ணாரத்தெரு முக்கூட்டில் நடைபெற்றுவந்த புதைசாக்கடை சீரமைப்புப் பணியை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த ஆணையா் பணிகளை பாதுகாப்பாகவும், விரைந்தும் முடிக்க ஊழியா்களிடம் அறிவுறுத்தினாா். பெட்ரோல் விலை தினசரி உயா்ந்து வரும் நிலையில், சிக்கனத்தை உணா்த்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் ஆணையா் சைக்கிளில் சென்றுவந்த நிகழ்வு, நகராட்சி அலுவலா்களிடையே விழிப்புணா்வை அளிப்பதாக அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.