கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து தொழிலாளா் சம்மேளம் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாகை திட்ட உபதலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட செயலாளா் சாரதி, கோட்டச் செயலாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நாகை மாவட்ட தலைவா் செல்வராஜ் பங்கேற்று பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் அதிக நேரம் பணி செய்ய நிா்பந்தித்து தொழிலாளா் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் கோட்ட செயற்பொறியாளா் முத்துக்குமரன், உதவி நிா்வாக அலுவலா் சரவணகுமாா் ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு தொழிலாளா்களை நடத்த வேண்டுமென்றும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.