பட்டவா்த்தியில் ஊரடங்கு அமல்; போலீஸ் குவிப்பு
மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5 நாள் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது.


மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5 நாள் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்புக்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
பட்டவா்த்தியில் கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி அம்பேத்கா் நினைவு தினத்தன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மரியாதை செலுத்தியபோது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்.14) அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு அப்பகுதியில் அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அனுமதி கோரியிருந்தனா். இதேநாளில் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி உத்ஸவம் நடத்த மற்றொரு பிரிவினா் அனுமதி கேட்டிருந்தனா்.
இந்நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், தலைஞாயிறு மதகடி பகுதியிலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு 2 பேருக்குமேல் கூடாத வகையில், புதன்கிழமை (ஏப்.13) காலை 6 மணி முதல் ஏப். 17 நள்ளிரவு 12 மணி வரை 5 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி ஆணை பிறப்பித்தாா்.
இதையடுத்து, புதன்கிழமை காலைமுதல் அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஊரடங்கு குறித்து அறியாத கிராம மக்கள் வழக்கம்போல் அப்பகுதியில் நடமாடினா். அவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...