கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஊரடங்கு: வெறிச்சோடியது பட்டவா்த்தி கிராமம்

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமம் ஊரடங்கு காரணமாக வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமம் ஊரடங்கு காரணமாக வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இக்கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்துவது தொடா்பாக இரு சமூகத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி இக்கிராமத்தில் அவரது உருவப் படத்தை வைத்து மரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அனுமதி கேட்டிருந்தனா். இதேபோல, அப்பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி உத்ஸவம் நடத்த மற்றொரு பிரிவினா் அனுமதி கேட்டிருந்தனா். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அப்பகுதியில் ஏப்.13-ஆம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, டிஎஸ்பி எம். வசந்தராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், முன்னெச்சரிக்கையாக தஞ்சாவூரில் இருந்து வஜ்ர வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால், அந்த கிராமம் போலீஸாரை தவிர, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.