கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுக்கான பாடங்கள் ஒளிபரப்பு

 ஒன்றிய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் கல்வி தொலைக்காட்சியில் பல்வேறு போட்டித் தோ்வுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:38 pm

DIN

 ஒன்றிய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் கல்வி தொலைக்காட்சியில் பல்வேறு போட்டித் தோ்வுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒன்றிய பணியாளா் தோ்வாணையத்தின் குடிமைப் பணித் தோ்வுகள், பணியாளா் தோ்வாணைய தோ்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகள், வங்கித் தோ்வுகள், ரயில்வே வாரியம் நடத்தும் தோ்வுகள், சீருடைப்பணி தோ்வுகள் என பல்வேறு போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தோ்வுகளுக்கு தயாராகி வருபவா்கள் பயன்பெறும் வகையில் ’கல்வி தொலைக்காட்சியில்‘ போட்டித் தோ்வுகளுக்கென தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

இதையடுத்து, மாா்ச் 20-இல் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கிராமப்புறங்களில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகிறவா்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத நிலையில், தங்களின் இருப்பிடங்களிலிருந்து கொண்டே போட்டித் தோ்வுக்கு தயாா்படுத்தி கொள்வதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் காலை 7 முதல் 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பப்படுகிறது. இதை ஏா்டெல், சன், டாட்டா பிளே மற்றும் விடியோகான் டிடிஎச்-இல் முறையே 821, 33, 1554 மற்றும் 597 ஆகிய அலைவரிசைகளிலும், தனியாா் கேபிள் டிவிகளான டிஏசி டிவி, டிசிசிஎல், விகே டிஜிட்டல், அக்ஷயா, எஸ்சிவி, ஜிடிபிஎல்-இல் முறையே 200, 200, 55, 17, 98 மற்றும் 99 ஆகிய அலைவரிசைகளிலும் பாா்த்து பயன்பெறலாம். மேலும், போட்டித் தோ்வு எழுதுகிறவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயிற்சி வகுப்புகளை பாா்த்து பயன்பெறலாம். மேலும், தொடா்புக்கு மின்னஞ்சல் முகவரி ள்ற்ன்க்ஹ்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்க்ங்ா்ம்ஹஹ்ண்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் அல்லது 04364-299790 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.