விளிம்புநிலை மக்கள் கருத்தரங்கு நிறைவு
மயிலாடுதுறை அருகே உள்ள மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் நடைபெற்ற ‘மயிலாடுதுறை மாவட்ட விளிம்புநிலை மக்களின் பண்பாட்டு அடையாளங்கள்’ என்னும் தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கு நிறைவுபெற்றது.


மயிலாடுதுறை அருகே உள்ள மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் நடைபெற்ற ‘மயிலாடுதுறை மாவட்ட விளிம்புநிலை மக்களின் பண்பாட்டு அடையாளங்கள்’ என்னும் தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கு நிறைவுபெற்றது.
இக்கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு முனைவா் த. செபாஸ்தி ஜான் பாஸ்கா் தலைமை வகித்தாா். தமிழாய்வுத் துறைத் தலைவா் சு. தமிழ்வேலு வரவேற்றாா். கருத்தரங்க நிகழ்வுகளை க. கோப்பெருந்தேவி தொகுத்து வழங்கினாா். கல்லூரி முதல்வா் இரா. நாகராஜன் நிறைவுரையாற்றினாா்.
ஏழு அமா்வுகளாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் 10 பழங்குடி இனக்குழுத் தொடா்பாக 20 ஆய்வாளா்கள் 20 ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா். நிறைவாக, செ.பொ. மாதவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...