கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் சிறை
கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மயிலாடுதுறை அருகே மாப்படுகையைச் சோ்ந்தவா் சேகா் (58) இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ்க்கும் (49) நிலத்தகராறு தொடா்பான பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நவ.12-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் சேகா் தேநீா் குடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கும், பிரகாஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டையை எடுத்து, சேகரை தாக்கியதில் அவா் படுகாயமடைந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனா். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிபதி பன்னீா்செல்வம் கொலை குற்றவாளி பிரகாஷ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் வித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, பிரகாஷை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுசென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...