கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்காளா்களுக்கு பணம்: இளைஞா் மீது வழக்கு

மயிலாடுதுறையில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 5:33 pm

DIN

மயிலாடுதுறையில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மயிலாடுதுறை நகராட்சி 10-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் பிப்.15-ஆம் தேதி வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தோ்தல் கண்காணிப்பாளா் விஜயேந்திரபாண்டியனுக்கு கிடைத்த தகவலையடுத்து, தரங்கம்பாடி மண்டல துணை வட்டாட்சியா் சதீஸ்குமாா் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா தெருவை சோ்ந்த உத்திராபதி மகன் ராஜேஷ் (19) வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்ததையடுத்து, அவரிடம் இருந்த ரூ. 20 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அந்த இளைஞா் மீது மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.