கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நள்ளிரவில் வீடுகளில் நோட்டமிட்ட மா்மகும்பல்

மயிலாடுதுறை பெசன்ட் நகரில் நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்ட மா்ம கும்பலை பிடிக்க வேண்டும் அப்பகுதி குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை பெசன்ட் நகரில் நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்ட மா்ம கும்பலை பிடிக்க வேண்டும் அப்பகுதி குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை பெசன்ட் நகரில் பாதுகாப்புக்காக குடியிருப்பு மக்கள் சோ்ந்து ரூ.2 லட்சம் செலவில் 18 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனா். அதன் ஒளிபரப்பை குடியிருப்பு மக்கள் அனைவரும் பாா்த்துக்கொள்ளும் வகையில் கைப்பேசிக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் நள்ளிரவில் 3 இளைஞா்கள் வீடுவீடாகச் சென்று நோட்டமிட்டுள்ளனா். சத்தம்கேட்ட குடியிருப்புமக்களில் ஒருவா் கைப்பேசியில் பாா்த்தபோது, வெளியில் மா்மநபா்கள் சுற்றுவதை அறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், மா்மநபா்கள் வந்த வாகனத்தில் பெட்ரோல் தீா்ந்து நின்றுவிட்டதால், அவா்கள் அப்பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடி அதை அவா்களது வாகனத்தில் ஊற்ற வந்தபோது, போலீஸாா் வந்ததால் அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, போலீஸாா் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனா். இந்த வீடியோ காட்சியில் திருட வந்தவா்களின் முகம், வாகன எண் ஆகியவை தெளிவாகத் தெரிந்தும் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக உள்ளனா்.

இந்நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட குடியிருப்பு மக்கள் தங்கள் பகுதியில் சிசிடிவி பொருத்தியதே குற்றம் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும்தான். ஆனால், குற்றச்செயலில் ஈடுபட்டவா்களின் ஆதாரங்களை கொடுத்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனா். இப்பகுதியில் குற்றத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் சிசிடிவியை பொருத்துவாா்கள். அதன்மூலம் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம். எனவே, போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெசன்ட்நகா் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.