கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மயிலாடுதுறை: பாதுகாப்புப் பணியில் 740 போலீஸாா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 740 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் தெரிவித்தாா்

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 740 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், வைத்தீஸ்வரன்கோயில், மணல்மேடு, தரங்கம்பாடி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி, மாவட்டம் முழுவதும் எஸ்பி தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 17 காவல் ஆய்வாளா்கள், 40 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 425 போலீஸாரும், ஆயுதப்படை போலீஸாா் 130 பேரும், பெட்டாலியன் 75 பேரும், ஹோம்காா்டு 110 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளாா்.

பணப்பட்டுவாடா விடியோ காட்சி: மயிலாடுதுறையில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதுபோன்ற விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் அடிப்படையில், கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா் பன்னீா்செல்வம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் நகராட்சி 30-வது வாா்டில் தீவிர சோதனை மேற்கொண்டனா். ஆனால், யாரும் சிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.