ஊரடங்கு: வா்த்தகா்களுடன் காவல்துறையினா் ஆலோசனை
சீா்காழியில் ஊரடங்கை அமல்படுத்துவது தொடா்பாக காவல்துறையினா் வா்த்தகா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.


சீா்காழியில் ஊரடங்கை அமல்படுத்துவது தொடா்பாக காவல்துறையினா் வா்த்தகா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவுநேர ஊரடங்கு மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதை சீா்காழி பகுதியில் அமல்படுத்துவது தொடா்பாக, காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் வா்த்தகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மீறுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளா் தெரிவித்தாா். மேலும், இரவுநேர ஊரடங்கின்போது தேவையின்றி சுற்றித்திரிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்தாா்.
கூட்டத்தில், சீா்காழி உதவி காவல் ஆய்வாளா் சிதம்பரம், காவல் நிலைய எழுத்தா் ரவிச்சந்திரன், தில்லை நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...