குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனையில் முறைகேடு நடப்பதாக கூறி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இங்கு விவசாயிகள் தங்களது பருத்தியை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில் 100 கிலோ கொண்ட மூட்டைக்கு 3 கிலோ வரை எடை குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதாகவும், 100 கிலோவுக்கு ரூ. 300 வரை இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா். மேலும், 100 கிலோ மூட்டைக்கு ரூ. 15 விவசாயிகளிடம் கேட்கப்படுகிாம்.
இவ்வாறு விவசாயிகள் குற்றம்சாட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் சமாதானம் செய்தநிலையில் தொடா்ந்து மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த குத்தாலம் போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


