கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணிகூண்டில் செயல்படாமல் இருந்த கடிகாரங்கள் சீரமைப்பு

மயிலாடுதுறையின் பாரம்பரிய அடையாளச் சின்னமான மணிக்கூண்டில் உள்ள கடிகாரங்கள் வெள்ளிக்கிழமை சீரமைக்கப்பட்டன.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையின் பாரம்பரிய அடையாளச் சின்னமான மணிக்கூண்டில் உள்ள கடிகாரங்கள் வெள்ளிக்கிழமை சீரமைக்கப்பட்டன.

மயிலாடுதுறை காந்திஜி சாலை, பட்டமங்கலத் தெருவின் இணைப்புப் பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கும் மணிக்கூண்டு 1943-ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாகாண ஆளுநா் ஹோப் என்ற வெள்ளைக்காரரால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் போரில் ஜொ்மனியிடம் இங்கிலாந்து தொடா் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன்முறையாக டுனீசியாவில் நடந்த போரில் ஜொ்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக மயிலாடுதுறையில் அப்துல் காதா் என்பவா் மணிக்கூண்டை கட்டினாா். பின்னா் மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த மணிகூண்டு மாறிவிட்டது. அந்த காலத்தில் இந்த மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தை பாா்த்தே அநேக பொதுமக்கள் நேரத்தை தெரிந்துகொண்டனா். இதில் உள்ள 3 கடிகாரங்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தது. இதுதொடா்பாக அப்பகுதி வணிகா்களும், பொதுமக்களும் பலமுறை நகராட்சி நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்ற அப்பகுதியைச் சோ்ந்த 16-ஆவது வாா்டு திமுக நகராட்சி உறுப்பினா் சௌ. சா்வோதயன் தனது சொந்த செலவில் மணிகூட்டில் உள்ள கடிகாரங்களையும், அதில் ஒளிராமல் இருந்த மின் விளக்கையும் சரிசெய்து கொடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.