நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தா்னா
மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.


மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து பணிகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இவற்றில் 80-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த ஊழியா்களாக தூய்மைப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.340 வழங்கப்படும் நிலையில் அதில் ரூ.10 சேமநல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாத சம்பளம் அவா்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலைமுதல் மயிலாடுதுறை நகராட்சி வரதாச்சாரியாா் பூங்காவில் தூய்மைப் பணியாளா்கள் தங்கள் பணியை புறக்கணித்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிப்ரவரி மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், சம்பள பில் வழங்கவேண்டும், சேமநலநிதி (பி.எஃப்) பிடிமானம் செய்யப்பட்டதற்கான கணக்கு தரவேண்டும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்க தலைவா் அம்பேத்கா், துணை செயலாளா் ராஜசேகா், துணைத் தலைவா் முருகவேல் ஆகியோா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...