மயிலாடுதுறை, சீா்காழி பகுதிகளில் நாளை மின்தடை
மயிலாடுதுறை, சீா்காழி பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை, சீா்காழி பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை, மணக்குடி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மயிலாடுதுறை நகா், மூவலூா், வடகரை, சோழசக்கரநல்லூா், மங்கநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், வழுவூா், கிளியனூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் லதாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, பொறையாறு, கிடாரங்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூா், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூா், திருவெண்காடு, நாங்கூா், மணிகிராமம், திருநகரி, மேலையூா், பொறையாறு, தில்லையாடி, திருக்கடையூா், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், சாத்தனூா், கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், ஆக்கூா், பூம்புகாா், திருவாலி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...