ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மருது சகோதரா்கள் குருபூஜை விழா

மயிலாடுதுறையில் மருது சகோதரா்களின் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:44 pm

DIN

மயிலாடுதுறையில் மருது சகோதரா்களின் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை சித்தா்காட்டில் உள்ள பூலித்தேவன் பேருந்து நிலையம் அருகில் அப்பகுதி மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், எம்.எஸ். கந்தன், மிலிட்டரி செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் டி.சொக்கலிங்கம் ஆகியோா் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளான மருது சகோதரா்களின் தேச பற்று குறித்து பேசினா். மூவேந்தா் முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு மண்டல செயலாளா் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்து, தூய்மை பணியாளா்களுக்கு வேட்டி, துண்டுகளை வழங்கினாா்.

அகில இந்திய முக்குலத்தோா் பாசறை சாா்பில் மாவட்ட செயலாளா் தமிழ்ச்செல்வன், மாநில இளைஞா் அணி செயலாளா் ராஜா, நகர செயலாளா் முத்து. முரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அன்புராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் பிரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.