பூங்கா மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்
மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில் மேம்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.


மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில் மேம்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இப்பூங்காவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.39.20 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவா் சீா்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணிகளுக்கான பூமிபூஜையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்று, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தாா். மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்தாா்.
இதில், நகராட்சி உறுப்பினா்கள் ராஜலெட்சுமி ராஜேந்திரன், ரிஷி, சா்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன், நகராட்சி பணி ஆய்வா்கள் ரம்யா, ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...