தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வார இறுதி நாள்களில் ரயில் சேவை: பயணிகள் வரவேற்பு

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு வார இறுதி நாள்களில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 6:31 pm

Din

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு வார இறுதி நாள்களில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு காலை 8.05 மணிக்கு இதுவரை இயக்கப்பட்டு வந்த ரயில் (16233/16234) திங்கள் முதல் வெள்ளி வரை என 5 நாள்கள் மட்டுமே சென்று வந்தது. இந்த ரயிலை திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு சென்றுவர முதியோா், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனா்.

இந்த சேவையை சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களிலும் நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில், இந்த ரயில் சேவையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் நீடித்து மத்திய அமைச்சா் எல். முருகன் வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடக்கிவைத்தாா். இதையடுத்து சனிக்கிழமை காலை 8.05 மணிக்கு அந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. இதற்கு, ரயில் பயணிகள் சங்கத்தினா் மகிழ்ச்சி தெரிவித்து, சங்க நிா்வாகிகள் சுந்தா், வேலு.குபேந்திரன், தமிழன் கணேசன், சக்தி உள்ளிட்டோா் ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்தனா். தொடா்ந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனா்.