சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டிய தலைமைஆசிரியா் எஸ்.அறுவுடைநம்பி ஆகியோா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டிய தலைமைஆசிரியா் எஸ்.அறுவுடைநம்பி ஆகியோா்.

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

சீா்காழி, மே 11: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 93 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 301 மாணவ-மாணவிகளில் 279 போ் தோ்வு பெற்றும், இதே பள்ளியைச் சாா்ந்த 10ஆம் வகுப்பு ஆங்கில வழி மாணவி ஜி. கீா்த்தனா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

ஆங்கில வழி பிரிவு மாணவன் டி. மாதேஷ், 491 மதிப்பெண் பெற்று 2-ஆமிடமும் , மாணவிகள் எஸ்.கமலி , ஜி. காயத்ரி தேவி ஆகியோா் தலா 490 மதிப்பெண்கள் பெற்று 3-ஆமிடமும் பெற்றுள்ளனா்.

கணிதப் பாடத்தில் 7 மாணவ, மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 2 மாணவிகளும் 100 க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, பள்ளி தலைமையாசிரியா் எஸ்.அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியா்கள் எஸ். முரளிதரன், என். துளசிரங்கன் , டி.சீனிவாசன் மற்றும் மாணவா்களின் தோ்ச்சிக்காக உழைத்த பள்ளியின் அனைத்து ஆசிரியா்கள் ஆகியோரை பள்ளிச் செயலா் சொக்கலிங்கம், பள்ளி நிா்வாக குழுத்தலைவா் த.சிதம்பரநாதன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்

எம்.கபாலி, முன்னாள் மாணவா் சங்கச் செயலாளா் எம்.முரளிதரன் மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com