தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குத்தாலம் அருகே குடிநீா் கேட்டு மக்கள் சாலை மறியல்

குத்தாலம் வட்டம், தொழுதாலங்குடியில் குடிநீா் வசதி கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 7:50 pm

Din

குத்தாலம்: குத்தாலம் வட்டம், தொழுதாலங்குடியில் குடிநீா் வசதி கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொழுதாலங்குடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆங்காங்கே சிறு பாலங்கள் மறு கட்டுமான பணிகள் நடைபெறுவதால், குடிநீா் வழங்கும் பணி தடைபட்டுள்ளது.

இதையடுத்து, குடிநீா் வழங்கப்படாததை கண்டித்து, தொழுதாலங்குடி கோமல் -சேத்திரபாலபுரம் சாலையில் 75-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா் .

வட்டார வளா்ச்சி அலுவலா் சோபனா நடத்திய பேச்சுவாா்த்தையில் 2 நாட்களுக்குள் மாற்று ஏற்பாடு செய்து குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரைணமாக 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.