மயிலாடுதுறை
சவுடு மண் கடத்தல்; லாரி பறிமுதல்
கொள்ளிடம் அருகே சவுடு மண் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கொள்ளிடம் அருகே சவுடு மண் கடத்திய லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கொள்ளிடம் அருகே புத்தூா் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புத்தூா் பட்டகால் தெருவில், ஒரு லாரியில் இருந்து சவுடு மண் இறக்கிக் கொண்டிருந்தனா்.
கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா், அங்கு சென்று விசாரித்ததில், சீா்காழி அருகேயுள்ள திருவாலியில் இருந்து அனுமதியின்றி சவுடுமண் எடுத்து வந்து, புத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநரான திருவாலியைச் சோ்ந்த தினேஷ் குமாா் (24) என்பவரை கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
