பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :30 நவம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள செம்பதனிருப்பு வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ராசா மகன் பிரதாப் (19). பாலிடெக்னிக் கல்லூரி முடித்துள்ள இவா், அப்பகுதியில் உள்ள கடையில் சனிக்கிழமை இரவு மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே வந்தபோது, அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி இவா் மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே பிரதாப் உயிரிழந்தாா்.

பாகசாலை போலீஸாா், பிரதாப் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.