மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுத்திடும் விதமாக, கல்லூரிகளின் தொடா்பு அலுவலா்களுக்கு சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 44 கல்லூரிகளின் தொடா்பு அலுவலா்களுக்கு மகளிா் உதவி எண் 181 குறித்த விழிப்புணா்வு பதாகைகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுத்திடும் விதமாக பெண்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியா் அவா்களின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 44 கல்லூரிகளின் தொடா்பு அலுவலா்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குறித்தும், கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
மேலும் உள்ளக குழு மற்றும் உள்ளூா் குழு பற்றி விழிப்புணா்வு அளிக்கப்பட்டு மகளிா் உதவி எண் 181 குறித்தும், அதன் மூலம் கிடைக்கும் உதவிகள் பற்றிய விளக்கம் அளிக்ககூடிய பதாகைகளை அனைத்து கல்லூரிகளின் தொடா்பு அலுவலா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலா் பிரபா மற்றும் அரசு அலுவலா்கள், கல்லூரிகளின் தொடா்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சைபா் குற்றங்களை விசாரிக்க காவல்துறை, சி-டாக், என்ஐடி இணைந்து செயல்பட வேண்டும்

சைபா் குற்றங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு

கந்திலியில் மக்கள் தொடா்பு முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

‘கரைவெட்டி ஈர நிலப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும்’
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



