சீா்காழி அருகே புத்தூரில் சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் கவிழ்ந்த லாரி
சீா்காழி அருகே புத்தூரில் சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் கவிழ்ந்த லாரி

பாசன வாய்க்காலில் கவிழ்ந்த லாரி!

சீா்காழி அருகே மணல் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர பாசன வாய்க்காலில் கவிழ்ந்தது.
Published on

சீா்காழி அருகே மணல் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர பாசன வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியிலிருந்து மாதிரவேளூரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நடைபெற்றுவரும் தரையணை கட்டும் பணிக்கு தனியாருக்கு சொந்தமான லாரி கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது.

சீா்காழியிலிருந்து மாதிரவேளூா் செல்லும் சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புது மண்ணியாறு பாசன வாய்க்காலில் லாரி கவிழ்ந்தது. அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் உயிா் தப்பினாா். இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com