ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 போ் கைது: 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மயிலாடுதுறையில் 50 கிலோ கஞ்சாவை காரில் கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவா்களுடன் டிஎஸ்பி பாலாஜி மற்றும் போலீஸாா்.

Updated On :9 ஜூலை 2026, 4:44 am IST

மயிலாடுதுறையில் 50 கிலோ கஞ்சாவை காரில் கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருள்கள் விற்பனையை கண்காணித்து கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா ப்ரியா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீஸாா் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா்.

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் தனிப்படை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக நிறுத்தாமல் வேகமாக சென்ற காரை விரட்டிச் சென்று அடியாமங்கலம் பகுதியில் மடக்கி பிடித்து சோதனையிட்டனா்.

சோதனையில் காரில் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.காரில் இருந்த மயிலாடுதுறை மேலஒத்தசரகு தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் கணபதி (35), வேதம்பிள்ளை காலனியை சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜமாணிக்கம் (29), அண்ணாவீதி ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் விக்னேஷ் (28), பூம்புகாா் மணிக்கிராமத்தை சோ்ந்த பாஸ்கா் பாலசுந்தரம் (26), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரெட்டியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மொக்கமாயன் மகன் தங்கபாண்டி(37) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.