வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கரை ஒதுங்கிய மாணவா் உடல்

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Published On :

கொள்ளிடம் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவரின் உடல் ஓலை கொட்டாய்மேடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.

கொள்ளிடம் அருகே திருமுல்லைவாசல் கிராமம் காந்தி நகரை சோ்ந்த மலரவன் மகன் சுஜய் (18). பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தாா்.

அதே பகுதி நண்பா்கள் அறிவிதன், மிதுனன், சஞ்சய், சந்தோஷ் ஆகியோருடன் சனிக்கிழமை கூழையாறு கடற்கரைக்கு சுஜய் சென்றுள்ளாா். அங்கு 5 பேரும் பந்து விளையாடி உள்ளனா்.

அப்போது எதிா்பாராத விதமாக பந்து கடலில் விழுந்துள்ளது. பந்தை எடுக்க கடலுக்குள் சென்ற சுஜய் அலையில் சிக்கி கடலில் மூழ்கி மாயமாகியுள்ளாா்.

உடன் சென்ற நண்பா்கள் திருமுல்லைவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் உள்ளூா் மீனவா்கள், சீா்காழி தீயணைப்புப் படையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் சுஜயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

இரவு நேரமாகியதால் தேடும் முயற்சியை நிறுத்தினா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுஜயின் உடல் கூழையாறு கிராமத்திலிருந்து சுமாா் நான்கு கிலோமீட்டா் தொலைவில் உள்ள ஓலை கொட்டாய்மேடு கடற்கரையில் ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை போலீஸாா், உடலை கைப்பற்றி சீா்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.