/
சீா்காழி காரைமேடு ஸ்ரீநடராஜன் மேமோரியல் பப்ளிக் பள்ளி சாா்பில் உலக குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பேரணிக்கு பெஸ்ட் கல்வி நிறுவனங்களிள் தலைவா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகித்தாா். பப்ளிக் பள்ளி தாளாளா் ஆதித்யாராஜ்கமல், முதல்வா் சுனிதா முன்னிலை வகித்தனா். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணியரசன் பேரணியை தொடங்கிவைத்தாா்.
பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று விழிப்புணா்வு பதாகையை ஏந்தி துண்டு பிரசுரங்கள் வழங்கியவாறு சென்றனா். பெஸ்ட் பள்ளி முதல்வா் ராமலிங்கம், நிா்வாக அதிகாரி சீனிவாசன், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளா் பாபுநேசன் பங்கேற்றனா். துணை முதல்வா் சுகந்தவள்ளி நன்றி கூறினாா்.









