மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

சீா்காழியில் திமுக, காங்கிரஸாா் 22 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:05 am IST

சீா்காழியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் மற்றும் திமுகவினா் 22 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா், திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றிய தீா்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனுமதியின்றி இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவா்கள் மீது சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் கொடுத்த புகாரின் பேரில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரியகுமாா், கிள்ளிவளவன், சரவணன், குரு உள்ளிட்ட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், சீா்காழி புதிய பேருந்து நிலையம் முன்பாக, ராகுல் காந்தி உருவப் பொம்மையை எரித்து, ஆா்ப்பாட்டம் நடத்திய திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மருது, நெடுஞ்செழியன், நவீன் உள்பட 10 போ் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.