நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு மறுவரையறை பட்டியலில் திருத்தம் இருப்பின் ஜன. 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 214 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் 434 ஊராட்சிகளில் உள்ள 3,426 ஊராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டுகளை பொருத்தவரை மாவட்ட ஊராட்சிச் செயலரும், ஊராட்சி ஒன்றிய வார்டுகளை பொருத்தவரை உதவி இயக்குநரும் (ஊராட்சிகள்), ஊராட்சி வார்டுகளைப் பொறுத்தவரை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மறுவரையறை அலுவலர்களாகவும், மாவட்ட ஆட்சியர் மாவட்ட மறுவரையறை அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள வரைவு மறுவரையறை பட்டியல் தொடர்பாக திருத்தங்கள், ஆட்சேபணைகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால், தொடர்புடைய மறுவரையறை அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக 2018 ஜன. 2-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.