எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாநில போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:15 am

DIN

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம்,  தொட்டியத்தில் அண்மையில் நடந்த மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகளப் போட்டிகளில் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில்  இப்பள்ளி மாணவர் ஆர்.சி. கணேஷ்  தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
இதேபோல், மாணவர்கள் ஆர்.சி. கணேஷ், பரத், ஸ்ரீராம், பர்கான் ஆகியோர் 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தனர். இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. சேகர் தலைமை வகித்தார்.
கல்வி நிறுவனங்களின் நிர்வாகி கே.வி. இராதாகிருஷ்ணன், செயலர் அனிதா இராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குநர் பிரவின்வசந்த் ஜெபேஷ், அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஷ்வா பிரபாகரசிங் வரவேற்றார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எம். சாந்தி, திட்டச்சேரி உடற்கல்வி ஆசிரியர் ஏ. கண்ணன், வைத்தீஸ்வரன்கோயில் உடற்கல்வி இயக்குநர் என். பிரபாகரன், ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் எஸ். முரளிதரன், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆண்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்லத்துரை, திருகாளச்சேரி உடற்கல்வி ஆசிரியர் கே. சுதாகர், ஆசிரியர் கோவி.நடராஜன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். முன்னதாக, இம்மாணவர்கள் சாரட் வண்டியில் முக்கிய வீதிகளின் வழியாக பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.  
சீர்காழி காவல் ஆய்வாளர் சிங்காரவேலு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி நிறைவில் விவேகானந்தா பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.