/

காவிரி விவகாரம்: சீர்காழி தலைமை அஞ்சல் நிலையம் முற்றுகை

காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சீர்காழி

Updated On :5 ஏப்ரல் 2018, 9:49 am IST

காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சீர்காழி தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு திமுக நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா. எம். முருகன் தலைமை வகித்தார். திமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகர திமுக செயலாளர் சுப்பராயன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் முசாஹூதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், திமுக, காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால், கடைவீதி சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தலைமை அஞ்சல் நிலையம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.