தமிழகத்தில் தரமான அரசியல் தலைவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பேத்தியும், கல்விக் கடவுள் காமராஜர் அறக்கட்டளையின் நிறுவனருமான டி.எ'ஸ்.கே. மயூரி.
மயிலாடுதுறை வட்டம், நாகங்குடி கிராமத்தில் உள்ள யூரோ கிட்ஸ் நர்சரி பிரைமரி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற 72- ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற டி.எ'ஸ். கே. மயூரி பேசியது: இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கல்வியறிவுடன், நாட்டுப்பற்றை உருவாக்குவதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாக உள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுநலன் மறந்து சுயநலத்தோடு வாழ்கின்றனர். இதனால், பல தரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுகின்றனர். 72-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றோம்; ஆனால் நாம் உண்மையாக சுதந்திரமாக வாழவில்லை என்பதுதான் வருத்தப்படக் கூடிய செய்தியாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை நல்ல அரசியல் தலைவர்களை அடையாளம் காண வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் எஸ்.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். தொழிலதிபர் எஸ். வி. பாண்டுரெங்கன், வள்ளாலகரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் சுகன்யா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் மில்கி மிஸ்ட் அபாரத் தொடக்கம்
காஞ்சிபுரம் இரட்டைக்கொலை சம்பவத்தில் இருவா் கைது

ஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்

'கேஒய்சி' புதுப்பித்தல் மோசடி: ரிசா்வ் வங்கி எச்சரிக்கை!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


