வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மாநில மக்களின் நலனுக்காக நாகூர் தர்காவில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கேரளத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, அம்மாநில மக்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். வீடுகளை இழந்து தஞ்சம் அடைய இடம் இல்லாமல், பரிதவித்து வரும் அம்மாநில மக்கள் மீண்டு வரவும், அவர்கள் நலம்பெற வேண்டியும் நாகூர் தர்காவில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பின்னர், ஆண்டவர் சன்னிதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் வெள்ளத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பெண்கள், குழந்தைகள் நலம் பெற வேண்டி சிறப்பு துவா ஓதப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்து சமய அறநிலையத் துறையில் 2 ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம்!

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்கா

நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் கீர்த்தி சுரேஷ்?

தொடரும் ரஷியா - உக்ரைன் போர்; டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி !
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


