
முத்திரையிடப்படாத இறைச்சியை விற்பனை செய்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
மருத்துவப் பரிசோதனை முத்திரையில்லாத இறைச்சியை விற்பனை செய்தால், தொடர்புடையோர் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ்
மருத்துவப் பரிசோதனை முத்திரையில்லாத இறைச்சியை விற்பனை செய்தால், தொடர்புடையோர் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என,எ நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
இறைச்சி விற்பனை செய்பவர்கள், கால்நடைகளை நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைகளுக்கு உள்படுத்தி, முத்திரையிட்ட பின்னரே இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும். மேலும், இறைச்சிகளை உரிய சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். அன்னதானக் கூடத்தில் இறைச்சி உணவு வழங்குவோரும் இந்த நடைமுறையைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
முத்திரையிடப்படாமல் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால், தொடர்புடைய விற்பனையாளர் மீது மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





