வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்கக் கோரிக்கை

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On :23 ஜூலை 2018, 5:41 am IST

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
நாகை மாவட்டம், கீழ்வேளூரில்  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆ. நடராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் டி. கணேசன்  பேரவையைத் தொடங்கி வைத்துப் பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் பி. ஜீவானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இதில் மாவட்ட இணைச் செயலாளர் கே. குப்புசாமி, செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பொ. ஆசைத்தம்பி,  சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜோதிமணி, தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு. சிவகுமார், அங்கன்வாடி ஊழியர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் பி. புவனேஸ்வரி, பள்ளி- கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.என். பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் வி. பாலசுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் அமைப்பாளர் ச. மதிவாணன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  ஒப்பந்த முறையை ரத்து செய்து, அரசுக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையைச் செயல்படுத்த வேண்டும். 21 மாதக் கால ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1,000 மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.