தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Published On :

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சங்க மாவட்டத் தலைவர் எம். என். அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க  வேண்டும், விளைநிலங்களைப் பாழ்படுத்த திட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு  விவசாயிகள் சங்க  மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம்  பேசியது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட  நாடு முழுவதும் செயலாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான ஒப்பந்தம் செப்.24-ஆம் தேதி போடப்படவுள்ளது. இந்நிலையில், இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். இதேபோல், காவிரிப் படுகையையும், விவசாய நிலங்களையும் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்  திட்டம் குறித்து தமிழக அரசின் கொள்கை முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நாகை. மாலி, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் வி. அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.