நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

நேதாஜி பிறந்தநாள் விழா

சீர்காழியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 2:56 am IST

சீர்காழியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நகரின் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள நேதாஜி சிலைக்கு, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை  அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் ஜி.வி. குமார் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் செல்வம், பாபு, காளிமுத்து, சீனிவாசன், சரவணன், பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாநிலச் செயலாளர் ஜெ. சுவாமிநாதன் தலைமையில், நேதாஜி சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்டத் தலைவர் சோலை. கோவிந்தராஜன், மாவட்ட அமைப்பாளர் க. பாலாஜி, மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.