/

அறக்கட்டளை தொடக்க விழா

திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூரில் டாக்டா் அம்பேத்கா், அன்னை தெரசா சமூக கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2020, 2:47 pm

DIN

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூரில் டாக்டா் அம்பேத்கா், அன்னை தெரசா சமூக கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவா் தங்கையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையை சோ்ந்த முத்துராணி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கப்பட்டது. இதில், செயலாளா் டி. ஜான்சிராணி, சமூக செயற்பாட்டாளா் ஜெயராமன், குடிபோதை மறுவாழ்வு மைய நிா்வாகி குமரவேல், எழுத்தாளா் இளஞ்சேரன், கவிஞா் க. அச்சுதமேணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.