சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் குடிசை வீடு எரிந்து சேதம்: மர்ம நபர் கொளுத்தியது அம்பலம்
சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் குடிசை வீடு எரிந்த விவகாரத்தில் அதனை மர்ம நபர் கொளுத்தியது அம்பலமாகியுள்ளது.


சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் குடிசை வீடு எரிந்த விவகாரத்தில் அதனை மர்ம நபர் கொளுத்தியது அம்பலமாகியுள்ளது. சீர்காழி விளந்திடசமுத்திரம் காளியம்மன் கோயில் தெருவில் இரு தினங்களுக்கு முன்னர் குடிசை வீடு எரிந்து சேதமானது.
இதுகுறித்து காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். மின் கசிவில் தீ விபத்து நடந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை தெருவாசிகள் ஆய்வு செய்த போது, சைக்கிள் வரும் மர்ம நபர் ஒருவர் ஒளிரும் ஒரு பொருளை (பாஸ்பரஸாக இருக்கலாம்) குடிசை வீட்டில் எரிந்து விட்டு செல்வது போன்றும், சில நிமிடங்களில் அவை அதிக ஒளியுடன் வெடித்து வீடு தீப்பற்றி எரிவது காமிரா பதிவில் தெரிகிறது.
அதேபோல் தீ விபத்துக்கு இரு தினம் முன்பு அதே மர்ம நபர் நள்ளிரவு 2 மணியளவில் அவுட் வெடியை வெடிக்கச் செய்து தப்பி ஓடுகிறார். இந்த காட்சியும் காமிராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த விளந்திடசமுத்திரம் பகுதி காளியம்மன் கோயில் பகுதி மக்கள் இரவில் நடமாடுவது சைக்கோ மனிதனா என அச்சம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...