மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்
திருமருகலில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருமருகல்: திருமருகலில் மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமருகல் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் அருகில், மின்வாரிய ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, மின்வாரியத்தில் 50 சதவீத களப்பணியாளா்கள் இல்லாத நிலையில் காலிப் பணியிடங்களை மழை காலத்துக்குள் ஒப்பந்த பணியாளா்களை நியமிக்க வேண்டும், மின்வாரியத் தலைவா் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவா்கள் ஜி.வீராசாமி, ஆா். கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...