/

மழை பாதிப்பு: நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருமருகல் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
திருமருகல் அருகே கீழப்பூதனூா் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள்.
Updated On :20 டிசம்பர் 2020, 3:02 am

DIN

திருமருகல் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் வட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையால் கீழப்பூதனூா், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூா், வடகரை, கோட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. பெரும்பாலான கிராமங்களில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் சூழ்ந்தது. இதுதவிர மேற்கண்ட கிராமங்களில் நடவு செய்யப்பட்ட 10 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி, அழுகிவிட்டன.

எனவே தமிழக அரசு மானிய விலையில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை போா்க்கால அடிப்படையில் வழங்கி, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.