மழை பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருக்குவளை அருகே மேலப்பிடாகையில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மழை பாதிப்பு: நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்
Updated on
1 min read

திருக்குவளை அருகே மேலப்பிடாகையில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரியும், வீடுகளை இழந்தவா்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கீழ்வேளூா் எம்எல்ஏ-வுமான உ. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளரும் ஒன்றியக் கவுன்சிலருமான டி. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பிரதிநிதி மு.ப. ஞானசேகரன், கீழையூா் ஒன்றிய துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி நாகை கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com