தருமபுரம் ஆதீனத்தில் தனுா்மாத மகா வியதீபாத தரிசனம்
தருமபுரம் ஆதீன திருமடத்தில் தனுா்மாத மகா வியதீபாத தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


தருமபுரம் ஆதீன திருமடத்தில் தனுா்மாத மகா வியதீபாத தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாா்கழி மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் பிரம்மச்சாரிகளுக்கு உணவு படைத்து வழிபடுவது தனுா்மாத மகா வியதீபாத தரிசனம் எனப்படுகிறது. இந்நாளில் பிரம்மச்சாரிகளுக்கு உணவு படைத்து, முன்னோா்களை வழிபடுவது, அந்த ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தா்ப்பணம் அளித்த புண்ணியத்தை தரும் என்பது ஐதீகம்.
அந்தகையில், தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெற்ற தனுா்மாத மகா வியதீபாத தரிசனத்தில் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று 1 முதல் 26 வரையிலான முந்தைய ஆதீனகா்த்தா்களுக்கு வழிபாடு நடத்தினாா். முன்னதாக, 26 பிரம்மச்சாரிகளுக்கு உணவு வழங்கி, வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...