கஞ்சா விற்ற தம்பதி கைது
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் கஞ்சை விற்ற தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் கஞ்சை விற்ற தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வேளாங்கண்ணி காவல் உதவி ஆய்வாளா் தேவபாலன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், மைக்கேல் பிரான்சிஸ் என்பவா் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக, மைக்கேல்பிரான்சிஸ் (60), அவரது மனைவி சகாயமேரி (55) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 2.5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...