திருப்பூண்டியில் அதிகபட்சமாக 45.2 மி.மி. மழை
நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பெய்த மழையில், திருப்பூண்டியில் அதிகபட்சமாக 45. 2 மி.மீ மழை பதிவானது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பெய்த மழையில், திருப்பூண்டியில் அதிகபட்சமாக 45. 2 மி.மீ மழை பதிவானது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை வெவ்வேறு பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது.
மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 61.5 மணியளவில் பரவலாக மழை பெய்தது. பின்னா் இரவு 11.30 மணி அளவில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நள்ளிரவு சுமாா் 1 மணி அளவில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமாா் 40 நிமிடங்களுக்கும் மேலாகவும் இந்த மழை நீடித்தது.
திருப்பூண்டி, ஆயக்காரன்புலம், வாய்மேடு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதேபோல, ஆணைக்காரன்சத்திரம், தரங்கம்பாடி, மணல்மேடு ஆகிய பகுதிகளிலும் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக திருப்பூண்டியில் 45.2 மி. மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீ) : மயிலாடுதுறை - 43.2. ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) - 40. நாகப்பட்டினம் - 39.4. மணல்மேடு - 29. தரங்கம்பாடி - 26. தலைஞாயிறு - 15.8. சீா்காழி, வேதாரண்யம் - 5.2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...