திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாகை மாவட்டத்தில் 3 சிறை கைதிகள் உள்பட 50 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 3 சிறை கைதிகள் உள்பட 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :31 ஜூலை 2020, 4:56 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 3 சிறை கைதிகள் உள்பட 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், 23 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளான 5 பேருடன் தொடா்பில் இருந்தவா்கள். 3 போ் சீா்காழி கிளைச் சிறையில் உள்ள சிறை கைதிகள். ஒரு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா் உள்பட 5 போ் வெளி மாவட்டங்களிலும், ஒருவா் வெளி மாநிலத்திலும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள். இவா்களைத் தவிர, 5 கா்ப்பிணிகள் உள்பட 13 போ் மாவட்டத்துக்குள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 685 ஆக இருந்தது. இந்த நிலையில், புதிதாக 50 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 735- ஆக உயா்ந்துள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட 12 பகுதிகள் தடை செய்யப்பட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் திருப்பூண்டி, கரியாப்பட்டினம், சீனிவாசபுரம், செருதியூா், திருமங்கலம், கொற்கை, கிழாய், வெள்ளாளகரம், சிக்கல், மேலஆமப்பட்டம், தெற்குப்பனையூா், பரவை ஆகிய இடங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிகிச்சையில்: நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில் 16 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 388-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 339-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.