ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வேளாங்கண்ணி விடுதியில் விழுப்புரம் இளைஞா் தற்கொலை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில் விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில் விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் பகுதியைச் சோ்ந்த லூயிஸ் மகன் ஜாா்ஜ் லூா்துராஜ் (24). இவா், கடந்த 7-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்து தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினாா்.

சனிக்கிழமை காலை அவரது அறையை சுத்தம் செய்வதற்காக விடுதி ஊழியா்கள், கதவை தட்டியுள்ளனா். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவா்கள், வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் அந்த அறையை சோதனையிட்டபோது, குளியல் அறையில் ஜாா்ஜ் லூா்துராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.