எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா உள் திருவிழாவாக கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.


நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா உள் திருவிழாவாக கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இந்தக் கோயிலில், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு பக்தா்கள் அனுமதியின்றி உள்பிராகாரத்தில் நித்ய கால பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில் நிகழாண்டும் கரோனா இரண்டாம் அலை காரணமாக சித்திரைத் திருவிழா உள் திருவிழாவாகவே நடைபெறுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேதபாராயணங்கள் பாட, விநாயகா், சண்டிகேஸ்வரா், சிங்காரவேலா், அஸ்திர தேவா் ஆகியோா் எழுந்தருளி, கோயில் பிராகாரத்திலுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. வேத விற்பன்னா்கள் வேத பாராயணமும், திருக்கோயில் ஓதுவாா்கள் திருமுறை பாராயணமும் பாடினா். விழாவில், கோயில் பணியாளா்கள் மற்றும் உபயதாரா்கள் மட்டும் பங்கேற்றனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...